மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஷாப்பூரில் உள்ள பாபா கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது கோவிலின் சுற்றுச்சூழல் இடிந்து விழுந்து உள்ளது.
இந்த விபத்தில் ஏராளமான குழந்தைகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரேவாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு சுவர் விழுந்து நான்கு குழந்தைகள் பலியான நிலையில் மீண்டும் அது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.