அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். 

அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்தனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது மாணவர் பச்சையப்பன் சிக்கிக்கொண்டார். பச்சையப்பனை காப்பாற்ற முயன்ற மற்ற மாணவர்களும் ஆற்றில் சிக்கியதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே தகவலறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து காணாமல் போன மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஆற்றில் மூழ்கி காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.