கொலை வழக்கிலிருந்து திமுக முன்னால் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னால் எம்எல்ஏ ரங்க நாதனை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் நடந்த கொலை வழக்கில் ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூரில் புவனேஸ்வர் என்ற நிலத்தரகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டார்.

நிலத்தகராவில் ஏற்பட்ட கொலை தொடர்பான வழக்கில் இருந்து ரங்கநாதன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். நிலத்தகராறு விவகாரத்தில் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் என்பவர் கொல்லப்பட்டது  தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்ட 12 பேரை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம் உள்ளிட்ட 12 பேருக்கு எதிரான சிபிஐ விசாரணை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் விடுவித்தது. கொலை வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி ரவி விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.