நீலகிரி குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஏற்கனவே எட்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தற்போது பேருந்தி நதியில் சிக்கி இருந்த பாண்டி தாய் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.