சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் பேருந்து கவிழ்ந்த நிலையில் திடீரென மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மேலும்  இந்த  விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.