BREAKING: கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *