கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் நேற்றில் இருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று இரவு தொடங்கிய கனமழையானது தொடர்ச்சியாக காலை வரை பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுடைய நலம் கருதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.