அதிமுக பொதுக்குழு வழக்கு ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் தொடர்ந்து 2ஆவது நாளாக நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருவது வருகிறது. இன்றைய தினம் மூன்றாவது நாளாக வழக்கின் வாதங்கள் என்பது நடைபெற்றது. ஓபிஎஸ் தரப்பில் தான் இன்றைக்கும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்பின் வாதம் இன்றைய தினம் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.