எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது..

எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல் திறன் தேர்வு தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு,இந்தி உட்பட 13 மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழ் மொழியில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.