ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..

ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த வேண்டும் என ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. மேலும் சேவல்களை துன்புறுத்தக் கூடாது, மது கொடுக்கக் கூடாது, காலில் கத்தி கட்டக்கூடாது என ஐகோர்ட் நிபந்தனை விதித்ததோடு,  நிபந்தனைகளை மீறினால் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.