காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆவார். இவருக்கு 75 வயது ஆகும் நிலையில் கடந்த மாதம் உடல்நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அவருடைய மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அரை கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் அவருடைய மகன் திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவினால் காலமானார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் சிறுவயதில் கடந்த வருடம் காலமானதால் அதே தொகுதியில் அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தற்போது இவர் இறந்துவிட்டார். மேலும் இதன் காரணமாக மூன்றாவது முறையாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது.