ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7:00 மணி முதல் மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வந்து வாக்கு வாக்களித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் பள்ளி வாக்கு சாவடியில் திடீரென வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது இரண்டு மணி நேரமாக காத்திருந்தும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.