#BREAKING: இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவாவில் ஜனவரி 26-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு பிறப்பித்த நிலையில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *