BREAKING: இன்று இரவு 10 மணி முதல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் இன்று இரவு 10 மணி முதல் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாகக் கூறி, மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்கள். இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். அதன்படி நாளை இரவு 7 மணி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டமாக கூடுதல், பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி சட்டமன்றத் தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் இன்று இரவு 10 மணி முதல் மதியம் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஏப்ரல் 7ஆம் தேதி காலை வரை மதுபான கடைகள் மூடப்படுகிறது. 144 தடை உத்தரவு நாளை முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் புதுச்சேரியில் இதுவரை ரூ.42,12 கோடி மதிப்பிலான பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.