தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது துபாயில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் புதிதாக ஒரு கார் ரேஸ் கம்பெனியை தொடங்கிய நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ரேசில் களம் இறங்குகிறார். சமீபத்தில் ஒரு விபத்து செய்ய அஜித் மீண்டும் தன் பயிற்சியை தொடங்கியுள்ளார். இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் இரு படங்களின் சூட்டிங் நிறைவடைந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது துபாயில் கார் ரேஸில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித் முதல் முறையாக பேட்டி கொடுத்துள்ளார். அவர் விளையாட்டில் தான் சாதிக்க விரும்புவதாக கூறிய விலையில் இனி 9 மாதங்களுக்கு சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். மேலும் விளையாட்டில் ஒரு ரேசராகவும் அணியின் உரிமையாளராகவும் நிறைய சாதிக்க வேண்டும் என்று நான் விரும்புவதால் சினிமாவிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.