தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதாவது அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் முன்னதாக கோவைக்கு சென்ற நிலையில் நேற்று விருதுநகருக்கு சென்றார். இன்றும் விருதுநகரில் ஆய்வு மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை இனி அரசாங்கமே ஏற்கும் என்று அறிவித்துள்ளார். அதாவது தொழிலாளர்கள் தன்னிடம் கோரிக்கை வைத்ததால் அதனை ஏற்று பட்டாசு வெடிவிபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவு வரை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார். மேலும் விருதுநகரில் உள்ள நீர்நிலைகள் சுமார் 41 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்றும் கூறினார்.