இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி. இவரை தற்போது கோவை பந்தய சாலையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கோவையில் ஈஷா யோகா மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டின் நக்கீன் இதழுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தியது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஓம்கார் பாலாஜி மிரட்டல் விடுக்கம் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. மேலும் இதன் காரணமாக தற்போது அவரை கைது செய்த போலீஸ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கிரிமினல் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கோவை பந்தய சாலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.