இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்ட நிலையில் கடந்த சீசனில் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தனர். அதன்பிறகு உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதே சமயத்தில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ரோகித் சர்மாவை நீக்குவதற்கு தற்போது பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் ரோகித்துக்கு அடுத்து பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.