நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நிலையில் 20 தொடரை இந்தியா 2- 1 என்ற கணக்கில் வென்று அசத்தி உள்ளது. 3ஆவது மற்றும் கடைசிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவில் வீழ்த்தியது. அகமதாபாத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234 எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 126* ராகுல் திரிபாதி 44, ஹர்திக் பாண்டியா 30 ரன் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.