தமிழ்நாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது மற்றும் யதார்த்ததுக்கு புறம்பானது என்று கூறப்பட்டுள்ளது.