பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, சம வேலைக்கு சம ஊதியம் குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு அமைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இக்குழு 3 மாதத்தில் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை அளிக்கும் என்று கூறினார். அதோடு, ஆசிரியர்களுக்கு ச10 லட்சத்தில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த அவர், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கேட்டுகொண்டார்