அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணி, இரவு எட்டு மணி முதல் காலை 6 மணி என மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் பேர் முதல் ஷிப்ட், 25 சதவீதம் பேர் இரண்டாவது ஷிப்ட், 25 சதவீதம் பேர் இரவு பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.