சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.