சென்னையில் உள்ள பட்டினம்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடம் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான பயன்பாடு இல்லாத கட்டிடம். இந்த கட்டிடம் விடிந்து விழுந்ததில் நேற்று சையத் குலாப் (27) என்ற வாலிபர் உயிரிழந்தார். அதாவது இவர் நேற்று இரவு வேலை முடிந்து அந்த வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த கட்டிடத்தின் பால்கனி ஒன்று இடிந்து அவருடைய தலையில் விழுந்தது. இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தகவலை அமைச்சர் த.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.