பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர், அரசின் உரையில் பல அம்சங்களை ஏற்கவில்லை என்றுகூறி, முதல்வர் முன்பே அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும், தான் கோரிக்கை விடுத்தும் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசியகீதம் பாடப்படவில்லை என்றும் ஆளுநர் குற்றம் சாட்டினார்.