அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள்  பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விட்டார்.  அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க செனட் தேர்தலில் 56 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் செனட்- ஐ குடியரசு கட்சி கைப்பற்றியது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு செனட்டில் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளதாக  குடியரசு கட்சி அறிவித்துள்ளது. ஜனநாயக கட்சி 42 இடங்களை பெற்றுள்ளது.