அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 270 எலக்டோரல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட கமலஹாரிஸ் மொத்தம் 214 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார்.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் தனக்கு கொடுத்துள்ளதாக அவர் நெகிழ்ந்து நன்றி கூறியுள்ளார்.
அதன் பிறகு அமெரிக்காவிற்கு மீண்டும் பொற்காலம் தொடங்கிவிட்டதாக கூறிய அவர், இது ஒரு நம்ப முடியாத வெற்றி என்றார். மேலும் வளமான அமெரிக்காவை உருவாக்குவேன் என்றும் எல்லை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.