தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை புரட்டி போட்டது. இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் புயல் கரையில் கடந்து நகரத் தொடங்கிய போது விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது மழையின் தாக்கத்தினால் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகளில் என்பது நடைபெற்று வருகிறது.
இந்த புயல் காரணமாக புதுச்சேரியிலும் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து மக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். இதன் காரணமாக புதுச்சேரிக்கு தொடர்ந்து விடுமுறைகள் என்பது வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக தற்போது புதுச்சேரி அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் மழையின் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தேதிகள் அனைத்தும் சனிக்கிழமை. மேலும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.