அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர். இதன் பெயரை தற்போது ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றியுள்ளனர். இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மேலும் அந்தமான் ஒரு சுற்றுலா தளமாக இருக்கும் நிலையில் அதன் தலைநகராக போர்ட் பிளேயர் இருக்கிறது.

இந்த பெயர் ஆங்கிலேயர் ஆட்சி முறையை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாக கூறி தற்போது அதனை அகற்றியுள்ளனர். அதற்கு பதில் சுதந்திர வெற்றியை குறிக்கும் வகையில் ஸ்ரீ விஜயபுரம் என்று பெயர் மாற்றியுள்ளனர். மேலும் இனி ஸ்ரீ விஜயபுரம் என்று அந்தமான் தலைநகர் அழைக்கப்படும் என அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.