மீஞ்சூர் மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ரவிக்குமாரின் மனைவி நிர்மலா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த ரவிக்குமாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.