நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி பேசியது மிகவும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அவர் மீது பல காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது. அதாவது பாலியல் இச்சை வரும்போது தாய் மகள் மற்றும் சகோதரியுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று பெரியார் சொன்னதாக சீமான் கூறினார்.

அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். நேற்று சீமானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. இந்நிலையில் சீமான் மீது கடலூர், திண்டுக்கல், தென்காசி, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.