நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் நகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 7 நகராட்சி பள்ளிகளில் படிக்கும் 1387 மாணவ, மாணவிகளுக்கு விரைவில் காலை சிற்றுண்டி திட்டம் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் குமாரபாளையம் புத்தர் தெருவில் நகராட்சி பள்ளியில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டப்பட இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.