இன்னைக்கு இப்படி வடை செய்து குடுங்க …சூப்பர் டேஸ்ட் …!!!

பிரெட் உருளைக்கிழங்கு வடை
தேவையான பொருட்கள் :
உருளைக் கிழங்கு – 3
பிரெட் துண்டுகள் – 12
வறுத்த ரவை –  1/2  கப்
அரிசி மாவு –   3 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
கேரட் துருவல் –   3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் –  3
இஞ்சித் துருவல் –  1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது
bread potato  vadaiக்கான பட முடிவுகள்
செய்முறை :
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். ஒரு  கிண்ணத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக் கொள்ள  வேண்டும் . இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு ,ப.மிளகாய், கறிவேப்பிலை,  வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள்,  சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்த மாவை வடையாகத் தட்டி,  சூடான  எண்ணெயில் போட்டு  பொரித்தெடுத்தால் சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை தயார் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *