இதிலுமா பதுக்கி வைப்பாங்க… தலைதெறிக்க ஓடிய உரிமையாளர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்ட 1162 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரோனா தொற்றின் 2- வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊடகங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. தற்போது தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் பகல் நேரங்களில் மது பாட்டில்களை வாங்கி இரவு நேரங்களில் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் படி மதுவிலக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள  டாஸ்மாக் கடைக்கு எதிரிலுள்ள ஒரு பாரில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு காவல்துறையினர் வருவதை பார்த்ததும் பார் உரிமையாளர் ஹாஜி என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் காவல்துறையினர் தீவிர சோதனை செய்தபோது கழிவறையில் 1162 மது பாட்டில் பெட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *