”பதற்றத்தில் எல்லை” இந்தியர்களை வெளியேற்றிய மெக்சிகோ…..!!

 சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்களை மெக்சிகோ அரசு தாய்நாட்டுக்கு மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது.

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமான முறையில் மக்கள் நுழைவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதனைத் தடுக்க மெக்சிகோ முயற்சி எடுக்கவில்லை எனில் அந்நாட்டு பொருட்களின் மீது வரி சுமத்தப்படும் எனவும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, மெக்சிகோவின் எல்லைகளில் அந்நாட்டு அரசு பாதுகாப்பினை பலப்படுத்தியது. இந்நிலையில், தோலுசா நகர சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்களை தாய்நாட்டுக்கு மெக்சிகோ அரசு திருப்பி அனுப்பியுள்ளது. தூதரக அலுவலர்களின் உதவியாலும் ஒருங்கிணைப்பாலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *