“கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி” … எப்போது செலுத்தலாம்…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டன் தடுப்பூசி அமைச்சர் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பலக்லைக்கழகம் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியும் பைசர் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் மாடர்னா என்ற நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மூன்றாவதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இதுவரை 29 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின்  முதல் டோஸை பெற்றுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் தடுப்பூசி அமைச்சர் Nadhim Zawahi, ”  70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உருமாறிய கொரோனா வைரசிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து கோவிட்  பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.

மேலும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார ஊழியர்கள் மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது  டோஸ் செலுத்த முன்னுரிமை வழங்கப்படும். இந்த பூஸ்டர் தடுப்பூசி குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பிரிட்டனில் கூடிய விரைவில் கொரோனா வைரசுக்கு எதிரான 8 தடுப்பு மருந்துகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த தடுப்பு மருந்துகள் கடுமையான பாதிப்பை உருவாக்கக் கூடிய மூன்று வேறுபட்ட கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கும் வகையில் இருக்கும் ” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *