இளைஞர்களின் நாயகன் ”எழுதிய புத்தகம் ஏராளம்” பிறந்தநாளோடு கொண்டாடுவோம் …!!

ஐயா அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஏராளம் , அது குறித்து பார்க்கையில் தான் தெரிகின்றது நீளும் பட்டியல் .

1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதவியேற்றார்.

மாணவர்களையும் , இளைஞர்களையும் அவர் சந்தித்த போதெல்லாம் ”கனவு காணுங்கள்” என்று ஒற்றை வாக்கியத்தை விதைத்துச் சென்றவர். தன் வாழ்நாளில் அதிக நேரத்தை மாணவர்கள் இடத்திலேயே கழித்த அப்துல் கலாம் 2015-ம் வருடம் ஜூலை 27-ஆம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சாதனை நாயகனாக திகழ்ந்த அப்துல்கலாம் இளைஞர்களின் கனவு நாயகன் ஆகவே இன்றும் வாழ்ந்து வருகிறார் .

ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா எழுதிய நூல்கள்:

  1. Turning Points; A journey through challenges 2012.
  2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
  3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
  4. Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.
  5. The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004
  6. Mission India (திட்டம் இந்தியா) ; ஏ பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005
  7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007
  8. Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988
  9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *