மும்பை அணை உடைப்பால் பலி எண்ணிக்கை 18_ஆக அதிகரிப்பு …!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை  உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 18_ஆக அதிகரித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த சில நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் கடந்த 3_ஆம் தேதி உடைந்தது.

மகாராஷ்டிராவில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

அணை உடைப்பில் வெளியேறிய நீர்  அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்ததில்  12 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.இதில் 23 பேர் அடித்து செல்லப்பட்டதாகவும் ,  11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் சொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 18_ஆக அதிகரித்துள்ளது. இறந்தபவர்களின் உடலை சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.