பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த்தையடுத்து பொதுமக்களிடையே அச்சத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.