அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…”மக்களிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை”

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் வரை உயிரிழந்ததாக தெரிகின்றது. மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது .

மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தநிலையில் இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத்துறையின் எச்சரிக்கை மீது போதிய கவனம் செலுத்தாதல் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடுப்பதினாரிடம் வருத்தத்தையும் , மன்னிப்பையும் தெரிவிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளது.