பாலிவுட் பிரபலம் மறைத்த உண்மை! கலங்கி நிற்கும் அரசியல்வாதிகள்.!

சீனாவின் வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது.

இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில் லண்டன் சென்றுவந்த இவர் தன்னை தனிமைபடுத்தி கொள்ளாமல்  பார்ட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். இவர் வெளிநாடு சென்றுவந்தது குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிகளில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரின் அலட்சியத்தால் பார்ட்டிகளில் கலந்து கொண்ட பிரபலங்களும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் சில முக்கிய பிரபலங்களுக்கு  தற்போது கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து அவர்கள் தங்களை தனிமை படுத்திக்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.