அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
எத்தியோப்பியாவின் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானதில் 155 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்வி எழுந்தது.

இந்த விபத்தையடுத்து இந்திய நாடுகள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் போயிங் அமெரிக்க நிறுவனம் விமானத்தில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இருந்த போதும் அதனை உலக நாடுகள் ஏற்க மறுத்து நிராகரித்து விட்டன.
இந்நிலையில் சர்வதேச நாடுகள், பயணிகளின் உயிருடன் விளையாட முடியாது என்று அழுத்தம் கொடுக்க அதன் காரணமாக அமெரிக்காவும் போயிங் விமனங்களுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனை அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.