ஆற்றில் மிதந்த பிணம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

வடுகபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிணம் மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஜோடற்பளையம் அடுத்துள்ள வடுகபாளையம் பகுதியில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் ஆற்றில் மிதந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக ஜோடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு உடற்கூராவிற்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த நபர் யார் என்பதும், எப்படி உயிரிழந்தார் என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *