போடு செம…. வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!!!!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்த்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.