போடு செம!…. இது வேற லெவல் அப்டேட்….. SK நடிப்பில் விரைவில் ரஜினி முருகன் 2…. ரசிகர்களை குஷிப்படுத்திய இயக்குனர்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பொன்ராம். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 2-ம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், படவிழாவின்போது இயக்குனர் பொன்ராம் ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ரஜினி முருகன் 2 படத்தை இயக்கப் போவதாக பொன்ராம் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஸ்ரீதிவ்யா கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாகவும் அனைவருக்கும் ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது எனவும்  கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள்.

மேலும் இயக்குனர் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக  வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆனால் சீமராஜா மற்றும் எம்ஜிஆர் மகன் திரைப்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.