போடு செம!…. நடிகர் கவுண்டமணியுடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் SK….? வெளியான வேற லெவல் அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நடிகர் சிவா தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வலம் வந்த கவுண்டமணி சினிமாவை விட்டு ஒரு கட்டத்தில் விலகி இருந்தார்.

அதன் பிறகு சில வருடங்களுக்கு முன்பாக 2 படங்களில் மட்டுமே கவுண்டமணி நடித்திருந்த நிலையில், தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கவுண்டமணியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தில் நடிக்குமாறு கவுண்டமணியிடம் கேட்டபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.