போடு வெடிய….! தீபாவளியை புக் செய்த 3 டாப் ஹீரோக்கள்….. ரசிகர்களுக்கு செம ட்ரீட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ராஜமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்த அனு‌ இம்மானுவேல் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது ஜப்பான் படத்தின் சிறப்பு டீசரை பட குழு வெளியிட்டுள்ளது.

அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி ஜப்பான் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே கடந்த தீபாவளி பண்டிகையில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதியது. இதில் கார்த்தியின் படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் சிவகார்த்திகேயன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா திரைப்படமும் தீபாவளி பண்டிகையில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://twitter.com/SilambarasanTR_/status/1661605651116888064?t=vYO0jnoWqLeNRubpHyy1fA&s=19

Leave a Reply