“குழந்தை பிறந்து18 நாள் தான் ஆகுது” தாய்க்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

குழந்தை பிறந்த 18 நாளில் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை மேல் தெருவில் வசித்து வரும் மணிகண்டன் என்பவருக்கும், பெங்களூர் அக்ராவரம் பகுதியை சேர்ந்த மோனிஷா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் அவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மோனிஷா 2-வது கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அருகிலுள்ள வாலாஜா அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையிலிருந்து அய்யம்பேட்டையில் அமைந்துள்ள  வீட்டிற்கு மோனிஷாவையும் அவரது குழந்தையையும் குடும்பத்தினர் அழைத்து சென்றனர். பின்னர் மோனிஷாவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் சிகிச்சைக்காக காவிரிபாக்கத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு சென்ற மோனிஷா திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மோனிஷா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அவரது தந்தை ஜெயவேல் காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி சில ஆண்டுகளிலேயே மோனிஷா உயிர் இழந்ததால் அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.