ரூ 68,75,000 பி.எம்.ட.பூள்யூ 8 சீரிஸ் இந்தியாவிலும் அறிமுகம் ..!!

பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா விலை மதிப்பின்படி இந்த காரின் விலை சுமார் 68.75 லட்சம்  ஆகும் . இந்நிலையில், இந்த கார் இந்தியாவில் முதன் முறையாக சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்பின் , சோதனையின்போது வெளிவந்த கார்களின் புகைப்படங்களில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தது.

Image result for bmw 8 series

எனினும், காரின் கூர்மையான லைன்கள் கிரீஸ் மற்றும் அதிரடி வடிவமைப்பு தெளிவாக தெரிகிறது. இதில் குறிப்பாக புதிய பி.எம்.டபூள்யூ. 8 சீரிஸ் மாடலில்  பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த பி.எம்.டபூள்யூ. 8 சீரிஸ் மாடலில் டகர்போச்சேர் செய்யப்பட்ட  3.0 லிட்டர் இன்-லைன் , 6 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 340 பி.ஹச்.பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 – 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.2 நொடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for bmw 8 series

மேலும், 8 சீரிஸ் மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் , 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 320 பி.ஹச்.பி பவர் மற்றும் 680 எண்ணம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.1 நொடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதோடு இந்த இரு–என்ஜின்களுக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.