நேக்காக BMW காரை அபேஸ் செய்த நபர்.. நீதிமன்றத்தின் தீர்ப்பு.. விழி பிதுங்கி நிற்கும் விற்பனையாளர்..!!

கனடாவில் சுமார் 1,40,000 டாலர்கள் மதிப்பு கொண்ட BMW காரை தவணையில் வாங்கிய நபர் தலைமறைவானதால் விற்பனையாளர் விழிபிதுங்கி நிற்கிறார்.

கனடாவில் இருக்கும் ஒன்ராரியோ பகுதியில் 26 வயதுடைய Dong Li என்ற நபர் 15,000 டாலர்கள் முன்பணமாக கொடுத்து 1,40,000 டாலர்கள் மதிப்புடைய BMW காரை வாகன விற்பனையாளரிடம் தவணை முறையில் வாங்கியிருக்கிறார். அதன்பின்பு அவர் முதல் மாத தவணையை செலுத்தவில்லை.

இதனால் விற்பனையாளர், அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் அவர் தவறான விவரங்கள் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்திருக்கிறது. 15,000 டாலர்கள் மட்டுமே கொடுத்துவிட்டு காருடன் தப்பியிருக்கிறார். எனவே காரை விற்பனை செய்தவர் மீதமிருக்கும் 1,29,000 டாலர்களை எப்படி வாங்குவது? என்று அதிர்ந்து போய்விட்டார்.

எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிபதி வழக்கை விசாரித்து விட்டு, உடனே வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு தீர்ப்பளித்துள்ளார். எனினும் கார் இருக்கும் இடம் தெரியாமல் எப்படி பறிமுதல் செய்ய முடியும்? என்று விற்பனையாளர் விழிபிதுங்கி உள்ளார். இதற்கு முன்பு இதே போன்று ஒரு வாகனம் சீன நாட்டிற்கு கடத்தப்பட்டதால், இந்த காரும் அங்கு சென்றிருக்குமோ? என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *